காஸா போரை நிறுத்த வலியுறுத்தும் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்
நாளுக்கு நாள் தீவிரமடையும் காஸா போரைக் குறித்து மெளனமாக இருக்கப்போவதில்லை என்று அமெரிக்கத் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் கூறியிருக்கிறார்.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவை சந்தித்தபின் அவர் தொலைக்காட்சி அறிக்கையை வெளியிட்டார். ஹாரிஸ், காஸா விவகாரத்தில் ஜனாதிபதி ஜோ பைடனைவிடக் கடுமையாகத் தமது கருத்தை முன்வைத்தார்.
இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரும் நவம்பர் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படும் திருவாட்டி ஹாரிஸ், 9 மாதமாகக் காஸாவைப் பீடித்திருக்கும் மனிதாபிமான நெருக்கடி குறித்து ஆணித்தரமான குரலில் பேசினார்.
ஒருபுறம் மக்கள் பரிதவிக்க, மரத்துப் போனது போன்று இருக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கமலா ஹாரிஸ் மெளனமாக இருக்கப் போவதில்லை என்று எச்சரித்தார்.