கென்யாவிற்கான பயணத்தை ரத்து செய்த அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ்
தென்னாப்பிரிக்காவில்(South Africa) நடைபெறவிருந்த ஜி20 உச்சிமாநாட்டிற்கான தனது பயணத்தை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்(Donald Trump) ரத்து செய்ததை அடுத்து, இந்த மாத இறுதியில் திட்டமிடப்பட்டிருந்த கென்யாவுக்கான(Kenya) பயணத்தை அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ்(J.D. Vance) ரத்து செய்துள்ளதாக கிழக்கு ஆப்பிரிக்க நாட்டின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 22 முதல் 23 வரை தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு, ஆப்பிரிக்காவில் வாஷிங்டனின்(Washington) நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான கென்யாவிற்கு வான்ஸ் செல்ல திட்டமிட்டிருந்தார்.
ஆனால் டிரம்ப், தென்னாப்பிரிக்கா தனது வெள்ளை ஆப்பிரிக்க சிறுபான்மையினருக்கு எதிராக மனித உரிமை மீறல்களைச் செய்ததாகக் கூறி, எந்த அமெரிக்க அதிகாரிகளும் ஜி20ல் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
டிரம்பின் முடிவின் விளைவாக, வான்ஸின் கென்யா வருகையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கென்யாவின் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.




