ஐரோப்பா

ஈரானில் அமெரிக்கா தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது பேரழிவை ஏற்படுத்தும் ; ரஷ்யா

ஈரானில் அமெரிக்கா அணுவாயுதங்களைப் பயன்படுத்தினால் அது பேரழிவை ஏற்படுத்தும் என்று கிரெம்ளின் மாளிகைப் பேச்சாளர் மிட்ரி பெஸ்கோவ் கூறியதாக ரஷ்ய அரசாங்கச் செய்தி நிறுவனமான டாஸ் (TASS) தெரிவித்துள்ளது.

அணுவாயுதங்கள் பயன்படுத்தப்படும் சாத்தியம் இருப்பதாக ஊடகங்களில் வெளியான ஊகச் செய்திகளின் தொடர்பில் பெஸ்கோவ் கருத்துக் கூறியிருந்தார்.இருப்பினும், எந்த ஓர் ஊடகத்தைப் பற்றியும் அவர் தெரிவிக்கவில்லை.

ஈரானின் ஃபொர்டோவ் சுரங்க யுரேனியச் செறிவூட்டல் தளத்தை முற்றிலுமாக தகர்க்க வழக்கமான வெடிகுண்டுகள் மட்டும் போதாது என்று அமெரிக்கத் தற்காப்பு அதிகாரிகள் தங்களுக்குள் பேசிக்கொணடதாக ‘த கார்டியன்’ செய்தித்தாள் குறிப்பிட்டு இருந்தது.

அந்தத் தளத்தை அழித்து ஒழிப்பதற்கான ஆரம்பகட்ட தாக்குதல்களுக்கு வெடிகுண்டுகள் தேவைப்படும் என்றும் அதன் பின்னர் பி-52 குண்டுவீச்சு விமானத்தில் இருந்து அணுவாயுதத்தை வீச வேண்டி இருக்கும் என்றும் அதிகாரிகள் கருத்துகளைப் பரிமாறியதாக அந்த செய்தித்தாள் கூறியிருந்தது.

இருப்பினும், ஃபொர்டோவில் அணுவாயுதத்தைப் பயன்படுத்துவது குறித்து அதிபர் டோனல்ட் டிரம்ப் பரிசீலிக்கவில்லை என்றும் அதற்கான சாத்தியக் கூறுகளை தற்காப்பு அமைச்சரும் ராணுவத் தளபதியும் வெள்ளை மாளிகைக் கூட்டத்தில் தெரிவிக்கவில்லை என்றும் அந்த பிரிட்டிஷ் செய்தித்தாள் குறிப்பிட்டு உள்ளது.

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்