உலகம் செய்தி

வெனிசுலாவில் (Venezuela) இராணுவ பயிற்சியில் ஈடுபடும் அமெரிக்க துருப்புகள் – மதுரோவிற்கு (Maduro) எச்சரிக்கையா?

வெனிசுலா (Venezuela) கடற்கரையிலிருந்து 200 கி.மீ. தொலைவில் இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளும் அமெரிக்க இராணுவக் கப்பலின் செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன.

கரீபியன் கடல் மற்றும் கிழக்கு பசிபிக் பகுதியில் அமெரிக்கா தனது இராணுவ இருப்பை அதிகரித்து, போர்க்கப்பல்கள், விமானங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான துருப்புக்களை நிலைநிறுத்தி வருகின்றது.

இந்த சூழ்நிலையில் அங்கு சர்வாதிகார ஆட்சியை நடத்தி வரும் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவிற்கு (Nicolas Maduro) மிரட்டல் விடுக்கும் வகையில் ட்ரம்பின் செயற்பாடு அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.

போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளை குறிவைப்பதாக ட்ரம்ப் தெரிவித்து வருகிறார்.

ஆனால் காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமல்  வெனிசுலாவின்  முக்கியமான இராணுவ இலக்குகளைத் தாக்க அமெரிக்கா தயாராகி வரக்கூடும் என்ற ஊகத்தை அரசியல் அவதானிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.

செயற்கைக்கோள் படங்கள் இந்த ஊகத்தை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!