இலங்கை விமானப்படைக்கு 10 ஹெலிகாப்டர்கள் நன்கொடை
இலங்கை விமானப்படைக்கு அமெரிக்க கடற்படையின் 10 அதிநவீன ‘பெல் 206 சீ ரேஞ்சர்’ (Bell 206 Sea Ranger) ரக ஹெலிகாப்டர்களை இலவசமாக வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது.
அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் (Julie Chung) தனது X தளத்தில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
‘திட்வா’ (Ditwah) புயல் போன்ற அனர்த்தங்களின் போது தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை முன்னெடுப்பதற்கும், விமானிகளின் பயிற்சிகளை மேம்படுத்துவதற்கும் இந்த ஹெலிகாப்டர்கள் பெரும் உதவியாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் மேலதிக பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் (Excess Defense Articles Program), டெக்ஸாஸில் தயாரிக்கப்பட்ட இந்த ஹெலிகாப்டர்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.





