உலகம் செய்தி

தாய்லாந்து–கம்போடியா போர் நிறுத்தத்தை வலுப்படுத்த அமெரிக்கா 45 மில்லியன் டொலர் உதவி

தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை வலுப்படுத்த,
அமெரிக்கா 45 மில்லியன் டொலர் உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

கிழக்கு ஆசியாவிற்கான அமெரிக்க உதவிச் செயலாளர் மைக்கேல் டிசோம்ப்ரே, கம்போடியாவில் அதிகரித்து வரும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சைபர்
மோசடிகளை எதிர்த்து போராட இரு நாடுகளுக்கும் 20 மில்லியன் டொலர் உதவி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

அண்மைய எல்லை மோதல்களால் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவ, எல்லை உறுதிப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு 15 மில்லியன் டொலரும், கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிமருந்துகளை அகற்ற 10 மில்லியன் டொலரும் வழங்கப்படும் என அவர் கூறினார்.

போர் நிறுத்த ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசிக்க, டிசோம்ப்ரே வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பேங்கொக் மற்றும் புனோம் பென்னில் தாய் மற்றும் கம்போடியாவின் மூத்த அதிகாரிகளை சந்தித்தார் என அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் ட்ரம்ப் மற்றும் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் நடத்திய மத்தியஸ்தத்தின் மூலம் அமைக்கப்பட்ட போர் நிறுத்தம் முறிந்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் மீண்டும் எல்லை மோதல்கள் வெடித்தன. இதனைத் தொடர்ந்து, டிசம்பர் 27 ஆம் திகதியன்று இரு நாடுகளும் புதிய போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டன.

இந்த 20 நாள் மோதலில் குறைந்தது 101 பேர் உயிரிழந்ததுடன், அரை மில்லியனுக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்தனர்.

அண்மைய போர் நிறுத்தத்தை கம்போடியா மீறியதாக தாய்லாந்து முதலில் குற்றம் சுமத்தியது. ஆனால் பின்னர், அந்த சம்பவம் தற்செயலான தீ விபத்து என கம்போடியா விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து, குற்றச்சாட்டை மீளப் பெற்றதாக தாய் இராணுவம் தெரிவித்தது.

இதனிடையே, கம்போடியா, தங்களுக்குச் சொந்தமானதாகக் கூறும் எல்லைப் பகுதிகளில் இருந்து தாய் படைகள் விலக வேண்டும் என கோரியுள்ளது.

இரு நாடுகளுக்கிடையேயான மோதல், பிரான்ஸ் காலனித்துவ காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட 800 கிலோமீற்றர் எல்லை தொடர்பான சர்ச்சையில் இருந்து உருவானது.
இதில் பல நூற்றாண்டுகள் பழமையான கோயில் இடிபாடுகள் உள்ளிட்ட பகுதிகள் மீது இரு நாடுகளும் உரிமை கோருகின்றன.

இந்த மோதலை தானே முடிவுக்கு கொண்டு வந்ததாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், அமைதிக்கான நோபல் பரிசுக்கு தாம் தகுதியானவர் எனவும் அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

ட்ரம்ப் பதவியேற்ற பின்னர், வெளிநாட்டு உதவிகளை பெருமளவில் குறைத்தார். இதன் காரணமாக, கம்போடியாவில் நீண்டகாலமாக வழங்கப்பட்டு வந்த கண்ணிவெடி அகற்ற உதவியும் சில காலம் நிறுத்தப்பட்டது. குறுகிய கால அமெரிக்க நலன்களுக்கு ஏற்ற உதவிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என அமெரிக்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தாய்லாந்து அமெரிக்காவின் நீண்டகால நட்பு நாடாகும். அதே நேரத்தில், கம்போடியாவுடன் உறவுகளை மேம்படுத்தி, அந்த நாட்டை சீனாவின் செல்வாக்கிலிருந்து விலக்க அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!