அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோருக்கான கூடுதல் தடுப்பு முகாம்கள் அமைக்க முடிவு

அமெரிக்காவில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்காக கூடுதல் தடுப்பு முகாம்களை அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத் துறை சார்பில், இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
தற்போது, 40 ஆயிரம் பேரை தடுப்புக்காவலில் வைக்கக்கூடிய அளவுக்கே கட்டமைப்புகள் உள்ளதாகவும், அதை இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சமாக உயர்த்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெக்சாஸ், கொலராடோ, இண்டியானா, நியூ ஜெர்சி மாகாணங்களில் உள்ள தடுப்புக் காவல் மையங்கள், ராணுவத் தளங்கள், சுங்க அமலாக்கத் துறை சிறைகளில் இந்தக் கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட உள்ளன.
புதிய குடியேற்ற தடுப்பு முகாம்கள் அமைக்க அமெரிக்க அரசு 45 பில்லியன் டொலரை ஒதுக்கியுள்ளது.
(Visited 1 times, 1 visits today)