செய்தி

உக்ரைனில் பரிசோதனை செய்யப்பட்ட வான்பாதுகாப்பு ஏவுகணையை தைவானுக்கு வழங்கும் அமெரிக்கா!

அமெரிக்கா தைவானுக்கு ஏறக்குறைய 700 மில்லியன் டொலர் மதிப்புள்ள மேம்பட்ட வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை விற்பனை செய்வதை உறுதிப்படுத்தியுள்ளது.

குறித்த வான்பாதுகாப்பு ஏவுகணைகள் உக்ரைனில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில், ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா மட்டுமே இப்போது இந்த அமைப்பை பயன்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் தைவானுக்கு வழங்கப்படும் 02 பில்லியன் டொலர் ஆயுத ஏற்றுமதியில் இந்த தொகுப்பும் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RTX ஆல் தயாரிக்கப்படும் இந்த வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் பிப்ரவரி 2031 இல் நிறைவடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தகவல் குறித்து RTX  பதிலளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!