வட அமெரிக்கா

131 சட்டவிரோதக் குடியேறிகளை உஸ்பெகிஸ்தானுக்கு நாடுகடத்தவுள்ள அமெரிக்கா

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கிய மத்திய ஆசியக் குடியேறிகள் 131 பேர், உஸ்பெகிஸ்தானுக்கு நாடுகடத்தப்படுவதாக அமெரிக்க உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடுகடத்தப்படுவோர் உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், கஸக்ஸ்தான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என புதன்கிழமை (ஏப்ரல் 30) அமைச்சு கூறியது. அவர்கள் புதன்கிழமை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டதாக அது சொன்னது.

“எங்களது பரஸ்பர பாதுகாப்பை மேம்படுத்தவும் சட்டத்தை நிலைநாட்டவும் உஸ்பெகிஸ்தானுடன் சேர்ந்து தொடர்ந்து பணியாற்றுவதை எதிர்பார்க்கிறோம்,” என்று உள்துறை அமைச்சர் கிறிஸ்டி நோயம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் மில்லியன்கணக்கான குடியேறிகளை நாடுகடத்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.

மேற்கு அரைக்கோளத்தில் உள்ள மூன்றாம் உலக நாடுகளுக்குக் குடியேறிகளை நாடுகடத்த டிரம்ப் நிர்வாகம் புதிய பயணப் பாதைகளை அமைத்துள்ளது. அண்மையில் ஈராக் நாட்டவர் ஒருவரை ருவாண்டாவுக்கு அது அனுப்பியது

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்