வட அமெரிக்கா

சீன இறக்குமதிகள் மீதான அமெரிக்காவின் முதல் கட்ட வரிகள் அடுத்த வாரம் அறிவிப்பு

சீன இறக்குமதிகள் மீதான அமெரிக்காவின் முதல் கட்ட வரிகள் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பதவியேற்ற முதல் நாளிலேயே, சீன இறக்குமதிகளுக்கு 10 சதவீத வரி விதிக்கப் போவதாக அவர் எச்சரித்தார்.

இருப்பினும், ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது, ​​சீனா மீது 60 சதவீதத்திற்கும் அதிகமான வரிகளை விதிப்பதாக டிரம்ப் உறுதியளித்தார்.

இருப்பினும், வரி விதிப்பு தொடர்பான எந்த நிர்வாக உத்தரவுகளிலும் டிரம்ப் கையெழுத்திடவில்லை.

இந்த வரிகள் பெப்ரவரி முதலாம் திகதி முதல் அமலுக்கு வரும் என்று டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார்.

 

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!