உலக நாடுகளை மிரட்டும் அமெரிக்காவின் அணுவாயுத ஏவுகணை

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை அமெரிக்கா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
உலகின் எந்த பகுதியிலும் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் மினிட்மேன்-3 என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை நேற்று பரீட்சித்து பார்க்கப்பட்டது.
மினிட்மேன்-3 ஏவுகணையை அமெரிக்க விமானப்படை நேற்று சோதனை செய்தது. இதில் ஆயுதம் இல்லை. இந்த ஏவுகணை மூலம், உலகின் எந்த பகுதி மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தலாம்.
கலிபோர்னியாவின் வாண்டன்பர்க் விண்வெளி தளத்திலிருந்து இந்த ஏவுகணை நேற்று ஏவப்பட்டது. இந்த ஏவுகணை மணிக்கு 15,000 மைல் வேகத்தில் பயணித்து, 4,200 கி.மீ தொலைவில் உள்ள மார்சல் தீவின் ரொனால்ட் ரீகன் ஏவுகணை பரிசோதனை மையத்துக்கு சென்றது.
இந்த மார்சல் தீவு, மத்திய பசிபிக் கடலில் அமைந்துள்ள எரிமலைகள் அடங்கிய தீவுப் பகுதி. இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது.