உலகம் செய்தி

ட்ரம்ப் நிர்வாகத்துக்கு நெருக்கடி: ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க அனுமதி!

மத்திய கிழக்கு போர்ச்சூழலால் கச்சா எண்ணெய் விலை உயருவதைத் தடுக்க, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கான கட்டுப்பாடுகளை அமெரிக்கா தற்காலிகமாகத் தளர்த்தியுள்ளது.

கடலில் ஏற்கனவே பயணத்தில் இருக்கும் ரஷ்ய எண்ணெய்க்கு மட்டுமே இந்தச் சலுகை பொருந்தும் என்று அமெரிக்க நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் விளக்கியுள்ளார்.

இந்த நடவடிக்கை ரஷ்யாவிற்குப் பெரிய பொருளாதார லாபத்தைத் தராது என்றும், உலகளாவிய தட்டுப்பாட்டைக் குறைக்கவே இது மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், பங்குச்சந்தை மற்றும் எரிபொருள் விலையேற்றத்தால் டொனால்ட் ட்ரம்பிற்கு ஏற்படும் அரசியல் அழுத்தங்களைக் குறைக்கும் நோக்கிலேயே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.

இந்த முடிவின் மூலம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு மேல் செல்வதை அமெரிக்க நிர்வாகம் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றது என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!