டொனால்ட் ட்ரம்பின் கடவுச்சீட்டுக் கொள்கைக்கு அமெரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி!
அமெரிக்காவில் பாலின அடிப்படையிலான புதிய கடவுச்சீட்டுக் கொள்கை நடைமுறைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அமெரிக்கக் கடவுச்சீட்டில் ஆண் (M) அல்லது பெண் (F) ஆகிய இரு பாலினங்களை மட்டுமே அங்கீகரிக்கும் வகையில் புதிய கடவுச்சீட்டுக் கொள்கை அமையவுள்ளது.
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அனுமதி இல்லை என அமெரிக்க உயர் நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது.
இதன் மூலம் அமெரிக்காவில் மூன்றாம் நிலை பாலினத்தவர்களின் உரிமைகள் குறித்து ஒரு புதிய சர்ச்சை நிலை எழுந்துள்ளது.
முன்னதாக, அமெரிக்கக் கடவுச்சீட்டில் ஆண், பெண் என்ற பாலினத்திற்கு மேலதிகமாக மூன்றாம் பாலினத்தவர் (X) என்ற தெரிவுக்கு அனுமதி வழங்குமாறு, மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏற்கனவே வெளிவிவகாரங்களுக்கான அமைச்சுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி, ஏற்கனவே வழங்கிய உத்தரவை நிறுத்தியுள்ளது.
அமெரிக்கா தனது பிறப்புச் சான்றிதழ் மற்றும் உயிரியல் வகைப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் ஆண் மற்றும் பெண் ஆகிய இரு பாலினங்களை மட்டுமே அங்கீகரிக்கும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார். இவ்வாறான நிலையில், அமெரிக்க ஜனாதிபதியின் நிலைப்பாட்டிற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த உத்தரவால், அமெரிக்கப் கடவுச்சீட்டுகளில் பிறப்பின்போது பதிவு செய்யப்பட்ட பாலினத்தை மட்டுமே அங்கீகரிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.




