இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

மும்பை தாக்குதல் குற்றவாளியை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் பலியானார்கள்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவரும் கனடா குடியுரிமை பெற்றவருமான தஹாவூர் ராணா என்பவர், கடந்த 2009ம் ஆண்டு அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது அமெரிக்க கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இதற்கிடையே ராணாவை நாடு கடத்த இந்தியா கோரிக்கை விடுத்து மனு தாக்கல் செய்தது.

இதையடுத்து லாஸ் ஏஞ்சல்சில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதி அளித்தது.

இதை எதிர்த்து ராணா அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடந்து வந்தது.

இந்த நிலையில் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

இந்த வழக்கில் ராணாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிரான மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது.

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படாமல் இருக்க ராணாவின் கடைசி முயற்சியும் தோல்வி அடைந்தது.

அவர் விரைவில் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ராணா, லாஸ் ஏஞ்சல்சில் உள்ள பெரு நகர தடுப்பு மையத்தில் உள்ளார்.

(Visited 32 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி