உலகம் செய்தி

சிரியாவில் உள்ள ISIS அமைப்பின் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்ட ட்ரம்ப்

சிரியாவின் பால்மைரா உநகரில் இரண்டு அமெரிக்க வீரர்களும்மொழிபெயர்ப்பாளர் ஒருவரும் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, சிரியாவில் உள்ள ISIS (ISIL) பயங்கரவாத அமைப்பை இலக்கவைத்து அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வட கரோலினா மாநிலத்தின் ராக்கி (Rocky)மவுண்ட் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் தங்கள் மூன்று தேசபக்தர்களை கொலை செய்த பயங்கரவாதிகள் மீது பெரும் தாக்குதலுக்கு தான் உத்தரவிட்டதாகவும் டரம்ப் இதன்போது கூறியுள்ளார்.

மேலும், இந்த தாக்குதல் மிகவும் வெற்றிகரமாகவும், துல்லியமாகவும” நடைபெற்றதாக தெரிவித்த அவர், ஒவ்வொரு இலக்கையும் குறைபாடற்ற முறையில் தாக்கினோம்
என்றும் பெருமிதம் அடைந்தார்.

உலகம் முழுவதும் வலிமை மூலம் அமைதியை மீட்டெடுக்கிறோம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மனித உரிமைகளுக்கான சிரிய ஆய்வகத்தின் தலைவர் ராமி அப்தெல் ரஹ்மான், கிழக்கு சிரியாவின் டெய்ர் அஸ் சோர் மாகாணத்தில் நடைபெற்ற தாக்குதலில் ISIL அமைப்பைச் சேர்ந்த ஐவர் கொலை செய்யப்பட்டதாக தெரிவித்தார். இதில், ட்ரோன் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பிரிவொன்றின் தலைவர் அடங்குவதாகவும் கூறப்பட்டது.

அமெரிக்க தாக்குதல்கள் ஹோம்ஸ், டெய்ர் அஸ் சோர் மற்றும் ரக்கா மாகாணங்கள் உட்பட சிரியாவின் பரந்த பாடியா பாலைவனப் பகுதிகளில் உள்ள ISIL மறைவிடங்களை குறிவைத்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நடவடிக்கைகளில் தரைவழி படையெடுப்பு இடம்பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பஷார் அல்-அசாத் ஆட்சி வீழ்ச்சியடைந்த பின்னர் உருவான சிரிய அரசு, அமெரிக்க இராணுவ நடவடிக்கைக்கு முழு ஆதரவு வழங்குவதாக ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.

சிரியாவின் வெளியுறவு அமைச்சகமும் ISIL-ஐ எதிர்த்துப் போராடுவதில் தங்களின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியதுடன், இந்த முயற்சிகளுக்கு அமெரிக்காவையும் சர்வதேச கூட்டணி நாடுகளையும் ஆதரிக்க அழைப்பு விடுத்துள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!