கொரோனாவுக்கு பிறகு மோசமான சரிவை சந்தித்த அமெரிக்க பங்குச் சந்தை

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் அறிவித்துள்ள வரிகளைத் தொடர்ந்து அமெரிக்கப் பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
5 ஆண்டுகளுக்கு முன்பு கொவிட் பரவலின்போது ஏற்பட்ட கடும் சரிவுக்குப் பிறகு கடந்த வாரம் அமெரிக்கப் பங்குச் சந்தையில் மோசமான சரிவு ஏற்பட்டது.
அந்நிலை தொடரும் என்று அஞ்சப்படுகிறது. டிசம்பர் மாதம் ஆக உச்சத்தைத் தொட்ட Dow Jones குறியீடு இப்போது அதிலிருந்து 10 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துவிட்டது.
அதேபோல் டிசம்பரில் உச்சம் தொட்ட Nasdaq குறியீடு அதிலிருந்து 20 சதவீதம் மதிப்பை இழந்துவிட்டது. வெள்ளை மாளிகை வரிகள் குறித்து அறிவித்தபிறகு S&P 500 குறியீடு 2 நாள்களில் 10.5 சதவீதம் குறைந்தது.
சந்தை மதிப்பீட்டின்படி அது சுமார் 5 டிரில்லியன் டொலர் இழந்தது. முதலீட்டாளர்கள் எது பாதுகாப்பான முதலீடு என்று தெரியாமல் நிலைகொள்ளாமல் தவிப்பதாகச் சந்தை கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.