அமெரிக்க வெளியுறவுத்துறையின் அதிரடி நடவடிக்கை – 1000 ஊழியர்கள் பணிநீக்கம்!

அமெரிக்க வெளியுறவுத்துறை சுமார் ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
டிரம்ப் நிர்வாகம் பணியாளர்களைக் குறைக்க முயற்சித்ததன் விளைவாக, வெளியுறவுத்துறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, சிவில் சேவையில் ஈடுபட்டுள்ள 1,107 ஊழியர்களும், வெளியுறவு சேவையில் இணைக்கப்பட்ட 246 ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் நிர்வாகத்தின் முடிவால், இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியுறவுத்துறையின் 1,500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தானாக முன்வந்து ராஜினாமா செய்தனர்.
(Visited 1 times, 1 visits today)