செங்கடலில் மூன்று ஹூதி கிளர்ச்சிக் கப்பல்களை அமெரிக்கா மூழ்கடித்தது

இரண்டு அமெரிக்க ஹெலிகாப்டர்கள் செங்கடலில் தாக்குதல் நடத்தி ஹவுதி கிளர்ச்சியாளர்களின் மூன்று கப்பல்களை மூழ்கடிப்பதில் வெற்றி பெற்றுள்ளன.
10 ஹவுதி கிளர்ச்சியாளர்களும் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈரான் ஆதரவுடன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் பயணித்துக்கொண்டிருந்த மார்ஸ்க் கொள்கலன் கப்பலைத் தாக்குகிறார்கள் என்ற தகவலின்படி அமெரிக்க தாக்குதல் ஹெலிகாப்டர்கள் அந்த இடத்தை அடைந்தன.
இந்த சம்பவத்தை அடுத்து, 48 மணி நேரம் செங்கடலில் பயணம் செய்வதை நிறுத்த முடிவு செய்துள்ளதாக மார்ஸ்க் நிறுவனம் அறிவித்துள்ளது.
(Visited 50 times, 1 visits today)