இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியா உடன் ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா
இஸ்ரேலுக்கு(Israel) 6.67 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுத விற்பனைக்கும், சவுதி அரேபியாவிற்கு(Saudi Arabia) 9 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுத விற்பனைக்கும் டிரம்ப் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதிகரித்து வரும் பிராந்திய பதட்டங்கள் மற்றும் டிரம்பின் தொடர்ச்சியான காசா போர் நிறுத்த முயற்சிகளுக்கு மத்தியில் இந்த ஒப்பந்தங்கள் வந்துள்ளன.
இஸ்ரேலுக்கான ஆயுத தொகுப்பில் $3.8 பில்லியன் மதிப்புள்ள 30 அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்கள்(Apache attack helicopters) அடங்கும்.
மேலும், $1.98 பில்லியன் மதிப்புள்ள 3,250 இலகுரக தந்திரோபாய வாகனங்கள், $150 மில்லியன் இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர்கள் அடங்கும்.
இதற்கிடையில், சவுதி அரேபியா 730 பேட்ரியாட் ஏவுகணைகள்(Patriot missiles) மற்றும் பிற உபகரணங்களைப் பெற உள்ளது.
இது பிராந்திய பாதுகாப்பை அதிகரிக்கும் என்றும், நேட்டோ அல்லாத ஒரு முக்கிய நட்பு நாடு வளைகுடா பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையைப் பராமரிக்க உதவும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.




