FBI இயக்குநராக காஷ் படேலை தேர்ந்தெடுத்த அமெரிக்க செனட்

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான FBIயின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நியமனம் செய்திருந்தார்.
இந்நிலையில் காஷ் படேல் அடுத்த FBI இயக்குநராக நியமனம் செய்யப்பட்டதை அமெரிக்க செனட் சபை உறுதி செய்துள்ளது.
இதன்படி 51-49 என்ற வாக்குகளின் அடிப்படையில் அவரின் நியமனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இரண்டு குடியரசுக் கட்சியினர், செனட்டர் சூசன் காலின்ஸ் மற்றும் லிசா முர்கோவ்ஸ்கி ஆகியோர் படேலுக்கு எதிராக வாக்களித்தனர்.
அமெரிக்க செனட் சபை இதுவரை டிரம்பின் அனைத்து அமைச்சரவை தேர்வுகளுக்கும் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
(Visited 6 times, 2 visits today)