மேலும் ஒரு வெனிசுலா எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்(Donald Trump) மற்றும் வெனிசுலா(Venezuela) எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ(Maria Corina Machado) இடையேயான சந்திப்புக்கு முன்னதாக, வெனிசுலாவுடன் இணைக்கப்பட்ட மற்றொரு டேங்கர் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது வெனிசுலாவுக்கு கப்பல்கள் செல்வதையோ அல்லது வெளியேறுவதையோ தடுக்கும் நோக்கில் கைப்பற்றப்பட்ட ஆறாவது கப்பலாகும்.
மேலும், குறித்த கப்பலை கரீபியனில் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் மேலதிக தகவல்கள் வழங்காமல் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு முன்னதாக ஜனவரி 9ம் திகதி வெனிசுலாவுடன் தொடர்புடைய ஒரு எண்ணெய் டேங்கர் கப்பலை கரீபியனில் கைப்பற்றியது.
தொடர்புடைய செய்தி
வெனிசுலாவுடன் தொடர்புடைய மற்றொரு எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா





