பணப்பரிமாற்ற செயலியில் பெயர் – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்

அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
‘த அட்லான்டிக்’ செய்தி ஆசிரியரை அமெரிக்காவின் ரகசிய போர்த் திட்ட குரூப் சாட்டிங்கில் இணைத்து பிரச்சனையில் சிக்கி, தவறுக்குப் பொறுப்பேற்ற அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
‘வென்மோ’ என்ற பணப்பரிமாற்ற செயலியின் தனது தொடர்புகளின் பெயர்களை பொதுமக்கள் காணும்படி வெளிப்படையாக வைத்துள்ளார்.
அதில் பல முன்னணி நிறுவன செய்தியாளர்களும் இடம்பெற்றுள்ளதால், அவர்களுக்கு பணம் அனுப்பி செய்தியை பரப்பினாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)