குர்ஆனை எரித்து சர்ச்சையில் சிக்கிய அமெரிக்க குடியரசுக் கட்சி வேட்பாளர்

டெக்சாஸின் 31வது காங்கிரஸ் மாவட்டத்திற்கு போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளரான வாலண்டினா கோம்ஸ், குர்ஆனின் நகலை எரித்த வீடியோவை வெளியிட்டதற்காக சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
வீடியோவில், கோமஸ், “டெக்சாஸில் இஸ்லாத்தை முடிவுக்குக் கொண்டுவருவதே தனது நோக்கம், மேலும் முஸ்லிம்களை மாநிலத்தை விட்டு வெளியேறுமாறு அவர் வலியுறுத்தினார்”.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மேக் அமெரிக்கா கிரேட் அகைன் (MAGA) பிரச்சாரத்தின் ஆதரவாளராக தன்னைத்தானே அறிவித்துக் கொண்ட அந்தப் பெண், கிறிஸ்தவ நாடுகளை வன்முறையால் அச்சுறுத்துவதாகக் குற்றம் சாட்டினார்.
எனது செயல்களுக்கு நான் துணை நிற்கிறேன், அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் படுகொலைக்குக் காரணமான, அபே கேட்டில் 13 அமெரிக்கப் படை வீரர்களின் உயிரைப் பறித்த, எங்கள் படுகொலைக்கு அழைப்பு விடுக்கும் புத்தகத்திற்கு நான் ஒருபோதும் மண்டியிட மாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.