செய்தி வட அமெரிக்கா

ஆவணப் பிழை காரணமாக இந்திய மாம்பழங்களை நிராகரித்த அமெரிக்கா

அமெரிக்காவிற்கு மாம்பழங்களை ஏற்றுமதி செய்த இந்திய விவசாயிகளுக்கு ஆவணத்தில் ஏற்பட்ட குழப்பத்தினால் கிட்டதட்ட 5 லட்சம் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மாம்பழங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, அட்லாண்டா உள்ளிட்ட அமெரிக்க விமான நிலையங்களுக்கு சென்று சேர்ந்திருக்கிறன.

ஆனால், இவற்றின் ‘ஆவணங்கள் சரியாக இல்லை’ என்று 15 மாம்பழ ஷிப்மெண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, ‘இந்தப் பழங்களை திருப்பி அனுப்புகிறோம் அல்லது இங்கேயே அழித்துவிடுகிறோம்’ என்று கூறப்பட்டிருக்கிறது. இந்தப் பழங்கள் திருப்பி அனுப்பப்பட்டால் மீண்டும் செலவாகும் என்று அமெரிக்காவிலேயே அந்த மாம்பழங்களை அழிக்குமாறு விவசாயிகள் கூறியிருக்கிறார்கள்.

அந்த மாம்பழங்களை அங்கேயே அழித்தாலும் இந்த விவசாயிகளுக்கு கிட்டதட்ட 5 லட்சம் டாலர் நஷ்டம்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!