செய்தி வட அமெரிக்கா

இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு 100% வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா!

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததை அடுத்து இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில், இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க,  இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு 100% வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அதிபர் டிரம்ப் வலியுறுத்தியதாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் இதை செயல்படுத்தினால், அதே நடவடிக்கையை அமெரிக்காவும் நடைமுறைப்படுத்தும் என டிரம்ப் உத்தரவாதம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

டிரம்பின் இந்த முடிவால் இந்தியாவில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்கள் கலக்கமடைந்துள்ளன.

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி