வரியைச் செலுத்தத் தவறிய குற்றத்தை ஒப்புக் கொண்ட அமெரிக்க ஜனாதிபதியின் மகன்
அமெரிக்காவில் 1.4 மில்லியன் டொலர் மதிப்புடைய வரியைச் செலுத்தத் தவறிய குற்றத்தை ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹண்ட்டர் ஒப்புக்கொண்டார்.
அவர் 10 ஆண்டுகள் காலமாக வரி செலுத்தவில்லை என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
டிசம்பர் 16ஆம் திகதி, பைடனுக்குத் தண்டனை விதிக்கப்படும். அவர் 17 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் ஒரு மில்லியன் டொலர் அபராதமும் எதிர்நோக்குகிறார்.
பைடன் மற்ற வழக்குகளிலும் ஈடுபட்டுள்ளார். அவர் துப்பாக்கியை வாங்கும்போது பொய் சொன்னதாக வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.
பைடன் போதைப்பொருள் பயன்படுத்திய உண்மையை மறைத்ததாகக் கூறப்பட்டது.
அந்தக் குற்றத்துக்கு 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை அவர் எதிர்நோக்குகிறார்.
(Visited 3 times, 1 visits today)