அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்! கமலா – டிரம்ப் இன்று நேருக்கு நேர் விவாதம்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் இன்று நேருக்கு நேர் விவாதத்தில் ஈடுபடவுள்ளனர்.
அமெரிக்காவின் ஜனநாயக்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தமது கொள்கை அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
‘New Way Forward’ எனும் கொள்கை அறிக்கை வாய்ப்புகள் நிறைந்த பொருளாதாரத்தை உருவாக்க உறுதியளிக்கிறது.
குடும்பங்களின் செலவுகளைக் குறைக்கவும் அதில் உறுதி கூறப்பட்டிருக்கிறது. ஹாரிஸூம் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டிரம்ப்பும் இன்று நேருக்கு நேர் விவாதம் நடத்தவிருக்கின்றனர்.
இருவரும் நேரில் சந்திப்பது இது முதல்முறை என்று கூறப்படுகிறது. கருத்துக் கணிப்புகளில் இருவரும் கிட்டத்தட்ட ஒரே நிலையில் உள்ளனர்.
(Visited 9 times, 1 visits today)