வட அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – 2 மாநிலங்களில் வாக்குப்பெட்டிகளுக்கு தீ வைப்பு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 2 மாநிலங்களில் வாக்குப்பெட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பொலிஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

நவம்பர் 5-ஆம் திகதி, அங்கு அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மக்கள் முன்கூட்டியே வாக்கு செலுத்த ஏதுவாக பல இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படும் வாஷிங்டனிலும், ஆரிகனிலும் இரு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பெட்டிகளுக்குள் விஷமிகள் தீயை கொளுத்தி போட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாக்குப்பெட்டிக்குள் பொருத்தப்பட்டிருந்த தீயணைப்பான் கருவியால் நெருப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இருந்தபோதும் நூற்றுக்கும் மேற்பட்ட வாக்குச் சீட்டுகள் எரிந்துபோயிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!