பைடன் மகன், மகளின் பாதுகாப்பு இரத்து – அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதிரடி

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் மகன், மகள் ஆகியோருக்கு வழங்கப்பட்ட இரகசிய சேவை பாதுகாப்பை ஜனாதிபதி டிரம்ப் இரத்து செய்து அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் முன்னாள் ஜனாதிபதிகளின் பதவியைவிட்டு செல்லும்போது அவரும், அவர்களது மனைவிக்கும் வாழ்நாள் முழுவதும் ரகசிய சேவை பாதுகாப்பு வழங்கப்படுகின்றது.
ஆனால் அவர்களது வாரிசுகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பானது பதவியை விட்டு விலகும்போது முடிவடைந்துவிடும்.
எனினும் டிரம்ப் மற்றும் பைடன் ஆகிய இருவரும் பதவியை விட்டு வெளியேறுவதற்கு முன்பு தங்களது பிள்ளைகளின் பாதுகாப்பை 6 மாதங்களுக்கு நீட்டித்தனர்.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹன்டர் பைடனுக்கு 18 பாதுகாப்பு ஏஜென்ட்கள் நியமிக்கப்பட்டனர்.
அவரது மகள் ஆஷ்லேவிற்கு 13 ஏஜென்ட்கள் நியமிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் மகன், மகளுக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவை பாதுகாப்பு உடனடியாக இரத்து செய்யப்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.