கொலம்பியா மீது தடைகளை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவு
டிரம்பின் குடியேற்ற நடவடிக்கையின் கீழ் நாடு கடத்தப்பட்ட புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற இரண்டு அமெரிக்க இராணுவ விமானங்களை போகோடா திருப்பி அனுப்பியதை அடுத்து, கொலம்பியா மீது வரிகள் மற்றும் விசா கட்டுப்பாடுகளை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.
அமெரிக்காவிற்குள் வரும் அனைத்து பொருட்களுக்கும் வாஷிங்டன் கொலம்பியாவை 25 சதவீத “அவசர வரிகள்” விதிக்கும், பின்னர் இது ஒரு வாரத்தில் 50 சதவீதமாக உயர்த்தப்படும் என்று டிரம்ப் தனக்குச் சொந்தமான சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் தெரிவித்தார்.
தனது நிர்வாகம் அரசாங்க அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது “பயணத் தடை மற்றும் உடனடி விசா ரத்து” மற்றும் “விசா தடைகள்” விதிக்கும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ தனது நிர்வாகம் “கண்ணியத்துடன்” நடத்தும் ஒரு நெறிமுறையை உருவாக்கும் வரை அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் செல்லும் விமானங்களை தனது அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்று கூறியதை அடுத்து இந்த அச்சுறுத்தல் வந்துள்ளது.