ஏமாற்றிய சீனா – கடும் கோபத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்

அமெரிக்காவுடன் மேற்கொண்ட வர்த்தக உடன்படிக்கைகளை மீறியதாக சீனா மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
சீனாவுக்கு நல்ல மனிதராக தாம் நடந்துக் கொண்டதற்கு கிடைத்த பரிசு இது என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
சமூக ஊடகப்பதிவு ஒன்றில் தமது கருத்தை தெரிவித்த டிரம்ப், சீனாவுக்கு மிகவும் அதிகளவில் வரிகள் விதிக்கப்பட்டிருப்பதால் அதன் பொருட்கள் அமெரிக்கச் சந்தையில் இடம் பிடிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.
அது அவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுத்தியதுடன், பல தொழிற்சாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இதனைக் காண தாம் விரும்பவில்லை என்பதால்தான் சீனாவுடன் வேகமாக ஒப்பந்தம் செய்ததாகவும் கூறிய டிரம்ப் அந்த ஒப்பந்தங்களை சீனா மீறியதாக குற்றம் சாட்டினார்
(Visited 20 times, 1 visits today)