அமெரிக்காவில் கருப்பின கர்ப்பிணியை சாலையில் தள்ளி விட்டு கைது செய்த காவல் அதிகாரி!
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கருப்பின கர்ப்பிணி ஒருவரை காவல் அதிகாரி கீழே தள்ளி விட்டு கைது செய்த காணொலி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே மாதம் கருப்பின தம்பதியர் பொதுவெளியில் சண்டையிட்டு கொள்வதாம காவல் நிலையத்துக்கு புகார் வந்தது.
அங்கு சென்ற காவல் அதிகாரி மாத்யூ,காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த கர்ப்பிணியை கீயே இறங்குமாறு கூறினார்.
தான் 6மாதம் கர்ப்பமாக இருப்பதாக அவர் கைறியதை பொருட்படுத்தாமல் காரிலிருந்து வெளியே இழுத்த மத்யூ, கைகளை முதுகிற்கு பின்னால் முறுக்கி சாலையில் தள்ளிவிட்டு அவரை கைது செய்தார்.
காவல் அதிகாரி மாத்யூவின் இந்த மூர்க்கத்தனமான நடத்தை குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்றது. உரிம்ம் இல்லாமல் கார் ஓட்டியது தொடர்பான வாசாரணைக்கு வர மறுத்த கருப்பின பெண்ணும் காவல் அதிகாரியை தாக்கியதாக அவரது கணவனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.