அமெரிக்க விமான விபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
அமெரிக்காவின் கென்டக்கியில் (Kentucky) சரக்கு விமானம் விபத்துக்குள்ளாகியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
லூயிஸ்வில் முகமது அலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து (Louisville Muhammad Ali International Airport ) புறப்பட்ட சரக்கு விமானமானது புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்தில் சிக்கியதாக அறிவிக்கப்பட்டது.
இந்த விபத்தில் விமானத்தின் பணியாளர்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளதாகவும், 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி மேலும் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.
விபத்துக்கான காரணம் அறியப்படாத நிலையில் முதற்கட்ட விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.





