அமெரிக்கா-ஈரான் இடையே கைதிகள் விடுவிப்பு தொடர்பில் ஒப்பந்தம்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பகை உணர்வு பல ஆண்டுகளாக நீடித்து வரும் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஈரான் கைது செய்து வைத்துள்ள 5 அமெரிக்க கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும், அதைப்போல அமெரிக்காவும் கைது செய்து வைத்துள்ள 5 ஈரானிய கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
மேலும் தென்கொரியாவில் இருந்து சுமார் 6 பில்லியன் அமெரிக்க டொலர் கத்தாருக்கு பரிமாற்றம் செய்யவும் அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே மத்திய கிழக்கு கடல் பகுதியில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் ராணுவ துருப்புகளை ஈரான் அச்சுறுத்தி வரும் நிலையில் இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்க எதிர்கட்சிகள் ஜோ பைடன் அரசை விமர்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தமானது கடந்த வாரமே அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கையெழுத்திடப்பட்ட நிலையில், இது குறித்த அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது.சுமார் 6 பில்லியன் அமெரிக்க டொலர் பரிமாற்றம் என்பது மனிதாபிமான பொருட்களை தயாரிக்க உதவிகரமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.