May 12, 2025
Breaking News
Follow Us
ஐரோப்பா

இந்தியாவின் உள் விவகாரங்களில் அத்துமீறி அமெரிக்கா தலையிடுகிறது – ரஷ்யா குற்றச்சாட்டு

காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளிப்பது முதல் நடப்பு மக்களவைத் தேர்தல் வரை, இந்தியாவின் உள் விவகாரங்களில் அமெரிக்கா அத்துமீறி தலையிடுவதாக ரஷ்ய வெளியுறவித்துறை செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா குற்றம்சாட்டி உள்ளார்.

அமெரிக்கா – ரஷ்யா இடையிலான வளரும் மோதலின் அங்கமாக, இந்தியாவை முன்வைத்தும் அமெரிக்கா மீது ரஷ்யா பாய்ந்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் நடவடிக்கையில், உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிர ஆதரவளித்து வருகின்றன. ஆயுதங்கள், உளவு தகவல்கள், போர் பயிற்சிகள் உள்ளிட்ட அமெரிக்காவின் இந்த ஆதரவு மூலமே, ரஷ்யாவின் பெரும்படை தாக்குதலுக்கு 2 ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைன் தாக்குப்பிடித்து வருகிறது.

உக்ரைன் விவகாரத்தில் தொடங்கிய அமெரிக்க – ரஷ்ய மோதல் வேறுப்பலவற்றை முன்னிறுத்தியும் வளர்ந்து வருகிறது. அவற்றில் ஒன்றாக தற்போது இந்தியாவை முன்வைத்து, அமெரிக்காவை ரஷ்யா கடுமையாக சாடி உள்ளது. அதில் முதலாவதாக, இந்தியாவுக்கு எதிரான காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு அமெரிக்காவின் ஆதரவு அமைந்துள்ளது.கடந்த ஆண்டு நவம்பரில், குர்பத்வந்த் சிங் பன்னூனைக் கொல்லும் சதித்திட்டத்தை முறியடித்ததாக அமெரிக்கா பெருமிதம் தெரிவித்தது. பன்னூனை கொல்லும் முயற்சியில் ஈடுபட்ட நிகில் குப்தா, இந்திய அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டினர்.

Russia accuses USA of interfering in India's Lok Sabha election, calls it  disrespectful - Russia accuses USA of interfering in India's Lok Sabha  election, calls it disrespectful -

பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் இந்தியாவில் தேடப்படும் பன்னூன், அமெரிக்கா மற்றும் கனடாவின் இரட்டை குடியுரிமை பெற்றவர். பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ், மத்திய உள்துறை அமைச்சகம் அவரை பயங்கரவாதியாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பன்னூனுக்கு எதிரான கொலை முயற்சியில் இந்தியா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அமெரிக்கா சுமத்துவதாக ரஷ்யா சாடி உள்ளது.

மேலும்’நாடாளுமன்ற பொதுத்தேர்தலை சிக்கலாக்கும் வகையில் இந்தியாவின் உள் அரசியல் சூழ்நிலையை சமநிலை இழக்கச் செய்வதாகவும், இதன் மூலம் இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட முயற்சிப்பதாகவும்’ அமெரிக்கா மீது ரஷ்யா குற்றச்சாட்டுகளை பட்டியலிடுகிறது.

ரஷ்யா மற்றும் சவூதி அரேபியா போன்ற தேசங்களின் கொள்கைகளை இந்தியா ஏற்க முயற்சிப்பதாக, ‘வாஷிங்டன் போஸ்ட்’ வெளியிட்டுள்ள செய்திக்கு பதிலளிக்கும் வகையில், ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா பேசுகையில் இவற்றை பட்டியலிட்டுள்ளார்.

(Visited 12 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்