சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் மீது தடை விதித்த அமெரிக்கா
காசாவில்(Gaza) போர்க்குற்ற விசாரணையை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல்(Israe) விடுத்த சவாலை நிராகரித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின்(ICC) மேலும் இரண்டு நீதிபதிகள் மீது அமெரிக்கா(America) தடைகளை விதித்துள்ளது.
ஜார்ஜியாவின்(Georgia) கோச்சா லார்ட்கிபனிட்ஜ்(Kocha Lartkibanidze) மற்றும் மங்கோலியாவின்(Mongolia) எர்டெனெபல்சுரேன் டாம்டின்(Erdenebalsuren Tamtin) மீது இவ்வாறு தடைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
“அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இறையாண்மையை மீறும், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நபர்களை அதிகார வரம்பிற்கு தவறாக உட்படுத்தும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார துஷ்பிரயோகங்களை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்” என்று வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ(Marco Rubio) ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சட்டம் மற்றும் எல்லை மீறலுக்கு குறிப்பிடத்தக்க மற்றும் உறுதியான விளைவுகளுடன் நாங்கள் தொடர்ந்து பதிலளிப்போம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த நடவடிக்கைகள் “ஒரு பாரபட்சமற்ற நீதித்துறை நிறுவனத்தின் சுதந்திரத்திற்கு எதிரான ஒரு அப்பட்டமான தாக்குதல்” என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.





