செய்தி வட அமெரிக்கா

ஈரான், ரஷ்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா – நிறுவனங்களுக்கு அதிரடி தடை

பொய் தகவல் வழங்கிய குற்றச்சாட்டில் ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகளின் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நவம்பரில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடந்தபோது பொய்த் தகவல்கள் மூலம் சமூக, அரசியல் பதற்றத்தை உருவாக்க முயன்றதாக அந்நாட்டு நிதியமைச்சு கூறியது.

மக்களாட்சி முறையைக் கீழறுக்க முயல்வோருக்கு எதிராகத் தொடர்ந்து மிகுந்த கவனமாக இருப்பதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

வொஷிங்டனின் குற்றச்சாட்டு தீங்கிழைக்கும் அவதூறு என்று மொஸ்கோ குற்றம் சுமத்தியுள்ளது.

வெளிநாடுகளின் உள்விவகாரங்களில் தான் தலையிடுவதில்லை என்று ரஷ்யா குறிப்பிட்டது.

அமெரிக்காவின் குற்றச்சாட்டை நிராகரித்த ஈரான், அதில் சட்டபூர்வமான எந்த அம்சமோ, நம்பகத்தன்மையோ இல்லை என்று கூறியது.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி