அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரி – சிரியா மீது வரலாறு காணாத வரி விதித்த டிரம்ப்

வெளிநாட்டு பொருட்கள் மீதான கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் நோக்கில், அமெரிக்கா பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கு உயர்ந்த இறக்குமதி வரிகளை அறிவித்துள்ளது.
டிரம்ப் நிர்வாகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, சிரியா மீது 41% வரி விதிக்கப்பட்டுள்ளது. இது அந்த நாட்டிற்கு இதுவரை விதிக்கப்பட்டுள்ள மிக உயர்ந்த வரியாகும்.
அதேபோல், லாவோஸ் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளின் பொருட்களுக்கு 40% வரி விதிக்கப்படும் எனவும், சுவிட்சர்லாந்து மீது 39%, செர்பியா மற்றும் ஈராக் மீது 35%, அல்ஜீரியா மற்றும் லிபியா மீது 30% வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி விதிப்பு நடவடிக்கைகள் அடுத்த வாரத்திற்குள் அதிகாரப்பூர்வமாக அமலில் வரும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த புதிய வரிகள் அமெரிக்க உள்நாட்டு சந்தையை பாதுகாப்பதற்காக, குறிப்பாக “அநியாயமான வர்த்தக நடைமுறைகள்” மற்றும் “தாழ்ந்த உற்பத்தி செலவுகளால் ஏற்பட்ட போட்டித் தடைகள்” போன்ற காரணங்களை எதிர்த்து நடவடிக்கை எடுப்பதற்காகவே எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த வரி உயர்வு, பாதிக்கப்படும் நாடுகளின் பொருட்கள் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்