இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

டிரம்ப்பின் வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட அமெரிக்கா – மற்றைய நாடுகளின் நாணயங்களின் மதிப்பு உயர்வு

டிரம்ப்பின் வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட அமெரிக்கா – மற்றைய நாடுகளின் நாணயங்களின் மதிப்பு உயர்வ

அமெரிக்கா ஜனாதிபதியின் வரி விதிப்பால் டொலர் மதிப்பைவிட ஜப்பான், பிரித்தானிய நாணங்களின் மதிப்பு வளர்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்கா மீது பல்வேறு நாடுகளும் அதிக வரி விதிப்பதாகக் கூறி, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரியை அறிவித்தார். மேலும், இந்த வரி விதிப்பு நடவடிக்கை மூலம் அமெரிக்க கருவூலத்துக்கு அதிகளவில் நிதி கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பல்வேறு நாடுகள் மீது வரி விதிக்கப்பட்ட நிலையில், நட்பு நாடான ஜப்பான் மீதும் 15 சதவிகித வரியை அறிவித்தார்.

இந்த நிலையில், ஜப்பான் நாணயமான யென் மதிப்பு அதிகரித்துள்ளது. இந்த மதிப்பு உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், டிரம்ப்பின் வரி விதிப்பும் முக்கிய காரணமாகக் கொள்ளப்படுகிறது.

அமெரிக்க டொலருக்கு எதிராக யென் 0.4 சதவிகிதமும், யூரோ 0.25 சதவிகிதமும், இங்கிலாந்தின் பவுண்டு 0.20 சதவிகிதமும், ஆஸ்திரேலிய டொலர் 0.2 சதவிகிதமும் வளர்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்காவின் வரி விதிப்பு காரணமாக, அந்நாட்டில் முதலீடுகள் குறைந்ததுடன், அமெரிக்க டொலரைவிட தங்கம் மற்றும் மற்ற கரன்சி மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இங்கிருந்துதான், டாலர் மதிப்பு சரியத் தொடங்கியது எனலாம்.

முதலீடுகள் குறைந்ததால், பணவீக்கம் அதிகரித்தது. இதனால், அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. வட்டி விகிதம் அதிகமாக இருந்தால்தான் முதலீடுகள் வரப்பெறும். இதுவே, சங்கிலித் தொடர்போல டாலர் மதிப்பை பின்னோக்கித் தள்ளத் தொடங்கியுள்ளன.

அதுமட்டுமின்றி, அமெரிக்காவுக்கு போட்டியாக சீனா, ரஷ்யா மற்றும் பிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சியாலும், அவர்கள் சொந்த கரன்சியை பயன்படுத்துவதாலும் அமெரிக்க டொலர் சரிந்தது எனலாம்.

(Visited 12 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி