அமெரிக்க ஹெலிகாப்டர் விபத்து: அவுஸ்திரேலியாவில் கொல்லப்பட்ட அமெரிக்க கடற்படையினர்

பயிற்சியின் போது வடக்கு அவுஸ்திரேலியா கடற்பகுதியில் அமெரிக்க இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த மூன்று அமெரிக்க மாலுமிகளின் விபரங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் வழக்கமான பயிற்சியின் போது 20 அமெரிக்க கடற்படையினர் உட்பட 23 பேருடன் விமானம் விபத்துக்குள்ளானது.
15 வருட அனுபவமுள்ள 29 வயதான கேப்டன் எலினோர் லெபியூ, 21 வயதான கார்போரல் ஸ்பென்சர் காலர்ட் மற்றும் 37 வயதான மேஜர் டோபின் லூயிஸ் ஆகிய மூன்று அமெரிக்க கடற்படையினர் இறந்தனர்.
விமானத்தில் இருந்த மற்ற 20 அமெரிக்க மாலுமிகளும் காயமடைந்தனர்.
அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. விபத்துக்கான சரியான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
(Visited 11 times, 1 visits today)