செய்தி

1,400 பழங்கால கலைப் பொருட்களை இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா

84 கோடி ரூபாய் மதிப்புடைய கொள்ளையடிக்கப்பட்ட 1,400க்கும் மேற்பட்ட பழங்கால கலைப்பொருட்களை, அமெரிக்கா இந்தியாவிடம் ஒப்படைத்தது.

நியூயார்க்கில் உள்ள இந்திய துணை துாதரகத்தில் முறைப்படி இவை திரும்ப ஒப்படைக்கப்பட்டன.

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் உள்ள நாடுகளில் இருந்து திருடப்பட்ட கலைப் பொருட்களை திருப்பி அனுப்புவதற்கான தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்துள்ளோம் என்று அமெரிக்க வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த பழங்காலப் பொருட்கள் கிமு 2000 முதல் கிபி 1900 வரையிலான காலப்பகுதியைச் சேர்ந்தவை. பெரும்பாலான பழங்கால பொருட்கள் டெரகோட்டா கலைப்பொருட்கள். மற்றவை கல், உலோகம், மரம் மற்றும் தந்தம் ஆகியவற்றால் செய்யப்பட்டவை.

பிரதமர் மோடி அமெரிக்கா வருகையின் போது 10 பழங்கால பொருட்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்டன. 2021 செப்டம்பரில் பிரதமர் மோடி மேற்கொண்ட பயணத்தின் போது 157 பழங்காலப் பொருட்களும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவரது விஜயத்தின் போது மேலும் 105 தொல் பொருட்களும் திரும்ப ஒப்படைக்கப்பட்டன,

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!