3வது வாரமாக முடங்கிய அமெரிக்க அரசாங்கம் – ட்ரம்ப் வெளியிட்ட உத்தரவு
அமெரிக்க அரசாங்கம் 3ஆவது வாரமாக முடங்கியிருக்கும் நிலையில் இராணுவச் சேவையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அடுத்த வாரம் சம்பளம் வழங்குமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
ட்ரம்ப் அவரது Truth Social கணக்கில் இது தொடர்பான பதிவுகளைப் பதிவிட்டுள்ளார்.
தற்போதிருக்கும் மத்திய அரசாங்க நிதியை வைத்து இராணுவச் சேவையில் பணிபுரியும் ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்குமாறு ட்ரம்ப் கூறியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத்திடம் தெரிவித்துள்ளார்.
தற்போது சேவையில் உள்ள கிட்டத்தட்ட 1.3 மில்லியன் ஊழியர்கள் எதிர்வரும் புதன்கிழமை சம்பளம் பெறுவதாக இருந்தது.
அரசாங்கம் முடங்கியிருப்பதால் சம்பளம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நவீன அமெரிக்க வரலாற்றில் இதுபோல் நடந்ததில்லை என கூறப்படுகின்றது.
எந்தெந்தப் பிரிவினர் இலவசச் சுகாதார பராமரிப்பைப் பெறுவர் என்பதில் ஏற்பட்டுள்ள கருத்துவேறுபாடு நிதி ஒதுக்கீட்டில் முட்டுக்கட்டை போட்டுள்ளது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை எந்தவொரு வாக்கெடுப்பையும் நடத்த செனட் சபை திட்டமிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





