கரீபியன் கடலில் மீண்டும் ஒரு படகை தாக்கிய அமெரிக்கப் படைகள் – நால்வர் மரணம்
கரீபியன் கடலில் ஒரு படகில் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்றதாக குற்றம் சாட்டி, அமெரிக்கா நான்காவது முறையாக தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
மேலும், “கப்பலில் இருந்த நான்கு பயங்கரவாதிகள் தாக்குதலில் கொல்லப்பட்டனர், இந்த நடவடிக்கையில் எந்த அமெரிக்கப் படைகளும் பாதிக்கப்படவில்லை,” என்று குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக தளமான Xல், வெனிசுலா கடற்கரைக்கு அருகில் நடந்த தாக்குதலின் வீடியோவை ஹெக்செத் பகிர்ந்து சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.
கடந்த மாதம் இதேபோன்ற மூன்று அமெரிக்க வான்வழித் தாக்குதல்களை நடத்தியது, முதலாவது செப்டம்பர் 2 அன்று நடந்தது. அந்த ஆரம்பத் தாக்குதலில் பதினொரு பேர் கொல்லப்பட்டனர்.
இரண்டாவது தாக்குதல் செப்டம்பர் 15ம் திகதி நடைபெற்றது. அந்த தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர்.
அதனை தொடர்ந்து நடந்த மூன்றாவது தாக்குதல் 19ம் திகதி நடைபெற்றது. இந்த தாக்குதலிலும் மூவர் கொல்லப்பட்டனர்.





