6 மாத குழந்தையை பராமரிக்க தவறிய அமெரிக்க தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை

அமெரிக்காவில் உள்ள இந்தியானவை சேர்ந்த டேவிட் ஸ்கோனாபாம் என்பவரின் 6 மாத குழந்தையை எலிகள் கொடூரமாக கடித்துக் குதறியது.
50க்கும் மேற்பட்ட இடங்களில் எலிகள் கடித்ததால் பாதிக்கப்பட்ட குழந்தையில் முகம் உட்படப் பல உடல்பாகங்கள் சிதைந்தது.
2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த ஓராண்டாக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் எலிகடியால் பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குழந்தையை ஒழுங்காக பராமரிக்காதது வீட்டிலிருந்த எலிகளை அகற்றாமல் குழந்தைக்கு தீங்கு ஏற்படுத்தியது என்ற குற்றச்சாட்டிற்காக இந்த தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.
(Visited 22 times, 1 visits today)