இலங்கை துறைமுக பாதுகாப்பு பிரிவுக்கு அமெரிக்க நிபுணர்கள் பயிற்சி!
அமெரிக்க கடற்படையின் Us Navy வெடிபொருள் அகற்றும் நிபுணர்கள் , இலங்கை துறைமுக அதிகாரசபையின் Sri Lanka Ports Authority பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் துறைமுக தீயணைப்புப் படையினருக்கு பயிற்சியளித்துள்ளனர்.
இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணு விடயங்களை கையாள்வது CBRN தொடர்பிலேயே இப்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளவை வருமாறு,
“ துறைமுகங்கள் பாதுகாப்பானவையாக இருக்கும்போது, வர்த்தகம் தொடர்ந்து இடம்பெறும்.
மக்களும் பாதுகாப்பாக இருப்பார்கள். இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணு விபத்து சம்பவங்களுக்குப் பதிலளிப்பது தொடர்பாகவே பயிற்சியளிக்கப்பட்டது.
அமெரிக்க கடற்படையினைச் சேர்ந்த வெடிபொருள் அகற்றும் நிபுணர்களால் Explosive Ordnance Disposal specialists , இலங்கை துறைமுக அதிகாரசபையின் பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் துறைமுக தீயணைப்புப் படையினருக்கே இந்த பயிற்சி வழங்கப்பட்டது.
ஆபத்துகளை விரைவாக அடையாளம் காண்பதற்கான, அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்துவதற்கான, துறைமுகத் தொழிலாளர்களையும் சுற்றியுள்ள சமூகங்களையும் பாதுகாப்பதற்கான தீயணைப்பு வீரர்களின் திறனை வலுப்படுத்த வேண்டும் .
இதன்மூலம் பிராந்தியத்தின் முக்கிய கடல்சார் மையங்களில் ஒன்றான கொழும்புத் துறைமுகத்தில் இடையூறுகளைத் தடுப்பதற்கு இப்பயிற்சி உதவுகிறது
.
இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதும் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து, மீண்டெழும் தன்மையுடைய விநியோகச் சங்கிலிகள் மற்றும் ஸ்த்திரத்தன்மை ஆகியவற்றிற்கு இது உதவியாக அமையும்.” – என்றுள்ளது.





