உலகம் செய்தி

ஈராக்கிலுள்ள அமெரிக்க தூதரகம்மீது ஏவுகணைத் தாக்குதல்!

ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் Baghdad அமைந்துள்ள அமெரிக்க தூதரக வளாகத்திற்குள் இருக்கும் ஹெலிபேட் தளம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தூதரகம் இன்னும் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை.

ஈரான் ஆதரவு பெற்ற குழுக்களால் அச்சுறுத்தல் இருப்பதாக ஏற்கனவே பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

உலகின் மிகப்பெரிய தூதரகங்களில் ஒன்றான இந்த வளாகம், கடந்த காலங்களில் தொடர்ச்சியாக ராக்கெட் மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகிறது.

அமெரிக்க குடிமக்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் மத்திய கிழக்கு போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!