அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்த அமெரிக்க பொருளாதாரம்
அமெரிக்கப் பொருளாதாரம், ஜூலை முதல் செப்டம்பர் வரையான மூன்று மாத காலத்தில் வேகமாக வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நுகர்வோர் செலவுகள் உயர்வடைந்து ஏற்றுமதிகள் அதிகரித்தமையே இதற்கு முக்கிய காரணம் என கூறப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய பொருளாதாரம், கடந்த காலாண்டில் 3.8% வளர்ச்சி வீதத்தில் இருந்துள்ளது.
ஆனால் புதிய புள்ளிவிபரங்களின் படி 4.3% ஆக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இது எதிர்பார்த்ததை விட சிறப்பான வளர்ச்சியென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் மிகவும் வலுவான வளர்ச்சியைக் குறிப்பதாகவும் அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அரசாங்க முடக்கத்தால் புள்ளிவிவர சேகரிப்பு தாமதமான நிலையில் நாட்டின் பொருளாதாரம் எந்த நிலைமையில் உள்ளது என்பதை இந்த தரவுகள் தெளிவாக காட்டுகின்றன.
கடந்த காலாண்டில் 2.5% வளர்ச்சி பெற்ற நுகர்வோர் செலவு, தற்போது 3.5% ஆக அதிகரித்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.





