நீதிமன்ற உத்தரவையும் மீறி வெனிசுலா குடியேறிகளை நாடு கடத்திய அமெரிக்கா

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 200க்கும் மேற்பட்ட வெனிசுலா குடியேறிகளை ஏற்றிச் சென்ற விமானங்கள் எல் சால்வடாரில் தரையிறங்கியுள்ளன.
டிரம்ப் நிர்வாகத்திற்கு இவ்வாறு செய்ய வேண்டாம் என்று அமெரிக்க நீதிபதி உத்தரவிட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை இடம்பெற்றுளளது.
எல் சால்வடோர் ஜனாதிபதி நயீப் புகேல் சமூக ஊடகங்களில் வெனிசுலா கும்பலான ட்ரென் டி அரகுவாவைச் சேர்ந்த 238 உறுப்பினர்களும், சர்வதேச எம்எஸ்-13 கும்பலைச் சேர்ந்த 23 உறுப்பினர்களும் வந்ததாக குறிப்பிட்டார்.
கைதிகள் உடனடியாக எல் சால்வடாரின் மோசமான மெகா சிறைச்சாலையான பயங்கரவாத சிறைச்சாலை மையத்திற்கு (சிகோட்) மாற்றப்பட்டதாக புகேல் எழுதினார்.
(Visited 1 times, 1 visits today)