பிரித்தானியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் சென்ற விமானம்
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) சென்ற விமானத்தின் கண்ணாடியில் ஏற்பட்ட விரிசல் காரணமாக பிரித்தானியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.
பெல்ஜியம் (Belgium) தலைநகர் பிரஸ்ஸல்ஸில் (Brussels) நடந்த நேட்டோ (NATO) பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் இருந்து ஹெக்செத் அமெரிக்காவிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், “நிலையான நடைமுறைகளின்படி விமானம் தரையிறங்கியது, செயலாளர் ஹெக்செத் உட்பட விமானத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்” என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் சீன் பார்னெல் (Sean Parnell) சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக பிப்ரவரி மாதம் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio) சென்ற அரசாங்க விமானத்தின் விமானி அறையின் ஜன்னலில் ஏற்பட்ட விரிசல் காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.





