அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் கியேவ் விஜயம்
அமெரிக்க பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின், கிய்வ் நகருக்கு விஜயம் செய்துள்ளார்.
“ஒரு முக்கியமான செய்தியை வழங்க நான் இன்று இங்கு வந்துள்ளேன்: ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான சுதந்திரத்திற்கான போராட்டத்தில் அமெரிக்கா உக்ரைனுடன் இப்போதும் எதிர்காலத்திலும் தொடர்ந்து நிற்கும் .” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க சட்டமன்றத்தில் உக்ரைன் உதவி தொடர்பாக பிளவு அதிகரித்து வரும் நிலையில் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.
போலந்தில் இருந்து ரயிலில் கியிவ் சென்ற ஆஸ்டின், ஜெலென்ஸ்கியைச் சந்தித்து, அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ருஸ்டெம் உமெரோவ் மற்றும் தலைமைத் தளபதி ஜெனரல் வலேரி ஜலுஷ்னி ஆகியோரைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார்.
ரஷ்யாவின் படையெடுப்பை தோற்கடிப்பதற்கான உக்ரைனின் முயற்சி “உலகின் மற்ற பகுதிகளுக்கு முக்கியமானது” என்றும் அமெரிக்க ஆதரவு “நீண்ட காலத்திற்கு” தொடரும் என்றும் கிய்வில் ஆஸ்டின் கூறியுள்ளார்.
ஆஸ்டினின் வருகை “உக்ரைனுக்கு மிக முக்கியமான சமிக்ஞை” என்று ஜெலென்ஸ்கி கூறியதுடன் “உங்கள் ஆதரவை நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
“உக்ரைனுக்கான அமெரிக்காவின் உறுதியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்த இன்று கிய்வில் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை சந்தித்ததில் நான் பெருமைப்படுகிறேன்” என்று ஆஸ்டின் தனது சந்திப்புக்குப் பிறகு X இல் பதிவிட்டுள்ளார்.